காத்தான்குடியில் பாரிய தீ விபத்து – சொத்துக்கள் நாசம்!

மட்டக்களப்பு காத்தான்குடியில் மர ஆலையொன்று தீப்பிடித்து எரிந்தமையினால் குறித்த மர ஆலை முற்றாக சேதமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


புதிய காத்தான்குடி பிர்தௌஸ் பாடசாலை வீதியிலுள்ள மொஹமட் நஜீம் என்பவருக்கு சொந்தமான மர ஆலையே இன்று (புதன்கிழமை) அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினர் ஸ்தலத்திற்கு விரைந்து தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த சம்பவத்தினால் குறித்த மர ஆலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்த பெறுமதியான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் என்பனவும் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த தீ பரவல் காரணமாக ஒரு கோடி ரூபாய்கு மேல் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் தொடர்பாக இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.