இன்றுதான் ஈழநாதம் மௌனித்தது!!

இறுதிபோர் கண்ட பத்திரிகையான “ஈழநாதம் மக்கள் நாளிதழ்” 09.05.2009 அன்று தனது சேவையினை நிறுத்திக்கொண்டது.


கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து தருமபுரம், உடையார்கட்டு, சுதந்திரபுரம் தேவிபுரம் ஆகிய இடங்களில் இருந்து வெளிவந்த ஈழநாதம் பத்திரிகை பெப்ரவரி 20 2009 இலிருந்து பாரஊர்தி ஒன்றில் வைத்தே அச்சிடப்பட்டு வந்தது. முதன் முதலாக இரணைப்பாலைக்கும் புதுமாத்தளன் சந்திக்கும் இடைப்பட்ட வீதியோரத்தில் பாரஊர்தியினை நிறுத்தியே பத்திரிகையினை அச்சிடப்பட்டிருந்தது. பின்னர் வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் முள்ளிவாய்க்கால் என நகர்ந்து 09.05.2009 அன்று தனது சேவையினை நிறுத்திக்கொண்ட்டது.

இப்பத்திரிகை வெளிவருவதற்காக உழைத்த சக பணியாளர்களான மரியநாயகம் அன்ரன் பெனடிக் (அன்ரன்), சசிமதன், நல்லையா மகேஸ்வரன் (மகேஸ் அண்ணை), மேரி டென்சி, ஜெயராசா சுசிபரன்(சுகந்தன்), மரியருளப்பன் அன்ரனிகுமார்(அன்ரனி), சங்கரசிவம் சிவதர்சன் (தர்சன்) ஆகியோர்களே இறுதி யுத்தகாலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களாவர்.
இப்புகைப்படத்தில் காணப்படுபவரே ஈழநாதம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொன்னையா ஜெயராஜ். 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதியில் இருந்து 2009 மே 9 ஆம் திகதிவரைக்கும் பணிபுரிந்தவர். அதாவது ஆரம்பித்த நாளிலிருந்து முடிவுறும் வரைக்கும். தற்பொழுது பிரான்சில் வசிக்கும் இவர் இறுதி யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற சிறிலங்கா படைகள் மீதான யுத்தகுற்றச்சாட்டுக்களுக்கான முக்கிய சாட்சியாளர்களில் ஒருவர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.