முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் எங்கள் உணர்வாகிய உப்புக்கஞ்சி, உணவாய் மாற்றி!📷

முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் அந்த மக்களின் உணவாகி இன்று எங்கள் உணர்வாகிய சிறட்டைகளில் பருகிய உப்புக்கஞ்சி,உணர்வையே உணவாய் மாற்றி!
சிவன் கோவில் இளைஞர்களால் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் முகமாக உப்பு கஞ்சி வழங்கப்பட்டது.

மாலை 5.00 மணிக்கு திருகோணமலையில் 40க்கு மேற்பட்ட இடங்களில் இறுதி யுத்தத்தில் உணவின்றி, எமக்காக உறங்கிப்போன உறவுகளின் இறுதி நேர தியாகங்களை நினைவுகூரும் முகமாக உப்பு கஞ்சி வழங்கப்படவுள்ளது.
திருகோணமலை,திருக்கோவில் பகுதிகளில் தற்போது கஞ்சி காய்ச்சி வழங்கப்படுகிறது இன்று பிற்பகல் கல்முனை நற்பிட்டிமுனை அக்கரைப்பற்று பகுதியிலும் கஞ்சி காய்ச்சி வழங்கபட இருக்கிறது. எம் உறவுகளின் உணர்வுகளை உணாவாக மாற்றி இணைவோம்..
-ஒருங்கிணைப்பு - அகரம் மக்கள் மய்யம்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.