கிழக்கில் ஹர்த்தால்!!
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவை பதவி நீக்கி, புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி கிழக்கின் சில பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
குறிப்பாக திருகோணமலையில் சில பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றதென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கிழக்கினைப் பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரில் நேற்று ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்த துண்டுப்பிரசுரங்கள் கிழக்கின் பல பகுதிகளில் விநியோகிக்கப்பட்டிருந்தன.
கிழக்கு மாகாணத்திற்கு மக்களை நேசிக்கும் ஒரு ஆளுநரை நியமிக்குமாறு கோரியே இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டிருந்தது.
இதற்கமைவாக திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் அனைத்து கடமைகள், வியாபார மற்றும் தொழில் நடவடிக்கைகளை நிறுத்தி ஆட்சேபனை தெரிவிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
எனினும் அனாமதேய துண்டுபிரசுரத்தில் ஹர்த்தாலக்கு அழைப்ப விடுக்கப்பட்டிருந்தமையினால், ஒரு சில பகுதிகளிலேயே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை