சினிமாவில் என்ட்ரி ஆகும் நித்யா!!

நித்யா






தாடி’ பாலாஜியுடன் ‘ஜோடி’ ஷோவில் கலந்துகொண்டபோது நித்யா போட்ட சண்டைதான், முதன்முதலில் அவரைப் பிரபலப்படுத்தியது.
`சேனல் ரேட்டிங்கிற்கான நாடகம் இது’ என முதலில் சொல்லப்பட்டாலும், திடீரென ஒருநாள் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் தந்தார் நித்யா. கணவன் மனைவிக்கிடையே நாலு சுவருக்குள் இருந்த பிரச்னையை அப்போதுதான் வெளியுலகம் அறிந்தது. மாறி மாறி இருவரும் புகார் சொல்லிக்கொண்டிருந்த சூழலில், விஜய் டிவியில் `பிக் பாஸ் சீசன் 2' தொடங்கியது. இருவரும் கலந்துகொண்டார்கள். ஷோ முடிவடைந்த நாளில், கமல்ஹாசன் முன்னிலையில், இருவரும் சமாதானமாகிவிட்டது போல் காட்டப்பட்டது. ஆனாலும் இன்று வரை தனித்தனியேதான் வசித்து வருகிறார்கள்.
பிக் பாஸ் ஷோ பலருக்கும் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியதுபோல், நித்யாவையும் தற்போது கேமரா முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அரசு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் ஒரு ஆல்பத்தில் நடித்து வருகிறார் நித்யா. கூடவே, ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறாராம்.
இதுகுறித்துக் கேட்டதும், ’ஆமாங்க, சினிமாவுல செகண்ட் ஹீரோயினா கமிட் ஆகியிருக்கேன். ஷூட் தொடங்கிடுச்சு. நடிக்கறதுக்காக முதன் முதலா கேமரா முன்னாடி நின்னப்ப சிலிர்ப்பா இருந்தது. படத்தின் பெயர், ஹீரோ யாருங்கிற விவரங்களையெல்லாம் முறைப்படி அறிவிப்பாங்க. எனக்குக் கிடைச்சிருக்கிற கேரக்டர் என் ரியல் லைஃப் மாதிரியே இருக்குங்கிறதுதான் இதுல ஹைலைட். கணவனை ஊக்கப்படுத்துகிற கேரக்டர்’ என்றவர், ‘பாலாஜி சினிமா வாய்ப்பு இல்லாம இருந்த காலத்துல நான் வேலைக்குப் போய் குடும்பத்தை நடத்தினேன். அந்த நாள்கள்ல அவர் விரக்தியா பேசறப்ப அவ்வளவு ஊக்கப்படுத்தியிருக்கேன். ‘நீங்களும் ஒரு நாள் சினிமாவுல நல்ல இடத்துக்கு வருவீங்க’னு அப்பப்ப சொல்வேன். அது நடந்ததது. ஆனா அதுக்குப் பிறகு நடந்ததெல்லாம் வேற மாதிரி ஆகிடுச்சு.
இப்ப இந்தப் படத்துல என் கேரக்டர் பத்திச் சொன்ன நிமிடம், அந்த ஃபிளாஷ்பேக்தான் நினைவுக்கு வந்தது’ என்கிறார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.