ஆராதனையால் நிறைந்தது சீயோன் தேவாலயம்!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் சீயோன் தேவாலயம் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து தேவாலயங்களிலும் ஞாயிறு திருப்பலிகள் பலத்த பாதுகாப்பின் மத்தியில் இடம்பெற்றது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி தொடக்கம் அனைத்து கத்தோலிக்க, திருச்சபை மற்றும் மெதடிஸ்த திருச்சபையின் திருப்பலிகள் நடைபெற்ற போதிலும் மக்களின் பிரசன்னம் மிகக் குறைவாககே காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
புனித மரியாள் பேராலயம், காந்தி கிராமம் கிராம சுபிஷேச சபை மற்றும் சீயோன் தேவாலயத்தின் திருப்பலி வில்லியம் ஒல்ற் மண்டபத்திலும் பலத்த பாதுகாப்பின் மத்தியில் ஞாயிறு ஆராதனைகள் நடைபெற்றது.
ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையின் பிரதான தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில், தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தொடர்ந்தும் அச்சமானதொரு சூழ்நிலை இலங்கையில் நிலவி வருகின்றமையால், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை பாடசாலைகள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
அதற்கிணங்க, கடந்த இரண்டு வாரங்களாக இலங்கையின் அனைத்து கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி பூஜைகளும் ஒப்புக்கொடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் தேவாலயங்கள் திறக்கப்பட்டு பூஜைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை