புரட்சிப் பெருந்தொகை! - எடப்பாடியைக் கலாய்த்த தினகரன்!!

புரட்சி என்கிற வார்த்தையை யாருக்குப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் மதுரையில் எடப்பாடிக்கு புரட்சிப் பெருந்தகை என்று பெயர் சூட்டிருக்காங்க.
இதைக்கேட்டிருந்தால் புரட்சித்தலைவியும், புரட்சித் தலைவரும் எனக்கு புரட்சி என்கிற பட்டமே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்” என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

கோவை சூலூர் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து டி.டி.வி தினகரன் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.  சின்னியம்பாளையம் பகுதியில் பேசிய அவர், ``புரட்சி என்கிற வார்த்தையை யாருக்குப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் மதுரையில் எடப்பாடிக்கு புரட்சிப் பெருந்தகை என்று பெயர் சூட்டிருக்காங்க. இதைக்கேட்டிருந்தால் புரட்சித்தலைவியும், புரட்சித் தலைவரும் எனக்கு புரட்சி என்கிற பட்டமே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். புரட்சிப் பெருந்தகை என்பதற்குப் பதிலாக புரட்சிப் பெருந்தொகை என்று வைத்திருக்கலாம். மோடிக்கு மண்டியிடுகின்றவர்களுக்கு இப்படி பெயர் சூட்டினால் எப்படி. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து நீதிமன்றத்துக்குச் சென்றோம். நீதி இழுத்துக்கிட்டே போச்சு அதனால் தேர்தலைச் சந்தித்தோம். மக்களுக்காக  இந்த ஆட்சி நடக்கவில்லை. நோட்டீஸ் பெருந்தகை (எடப்பாடி பழனிசாமி) 3 எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. துரோகம் செய்வதில் வேண்டுமானால்  எடப்பாடி புரட்சியாக இருக்கலாம். பழனிசாமி, பன்னீர்செல்வம்  என்றால் எட்டப்பன்தான் ஞாபகம் வரும்.

வருங்காலத்தில் பாடப்புத்தகத்தில் எட்டப்பர்கள்  என்று பெயர் வரப்போகுது. சசிகலாவுக்குத் துரோகம் செய்தால் நாங்கள் விட்டுவிடுவோமா?
துரோகத்தை வேரோடு சாய்க்கமால் விடமாட்டேன். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி சேராததால்தான்  ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதுகூட மோடி வந்து பார்க்கவில்லை. அம்மாவைக் கொன்றிருந்தால் மோடிக்கு தெரியாதா. ஏன் கவர்னர் வந்து பார்த்துவிட்டு, ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் என்று சொல்ல வேண்டும். கேட்டால் அம்மாவைக் கொன்றுவிட்டார்கள் என்று சும்மா சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அம்மாவைக் கொன்றது யாரன்று வெளியில் வரும்.

பன்னீர்செல்வம் துரோகம் செய்ததால்தான் மதுரைக்குள் போகவே முடியவில்லை. அதனால்தான் என்னைப் பார்த்தால் பாவமில்லை என்று பிரசாரத்தின்போது பேசினார். பா.ஜ.க-வின் தமிழ்நாட்டு சிறப்பு பிரதிநிதியாக பன்னீர்செல்வம் இருந்ததனால்தான் அவரை முதல்வர் பதவியில் இருந்து விலக்கினோம். மோடிக்குப் பயந்துகொண்டு, உங்கள் ஊர் உயரமான ஜமீன்தார் வேலுமணி மற்றும் இன்னொரு தளபதி தங்கமணியெல்லாம் அன்று சுவர் ஏறி ஓடப்பார்த்தார்கள். என்னைப் பார்த்ததும் மீண்டும் வந்துவிட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் இவர்களுக்கு சவுக்கடி கொடுப்பார்கள். 23-ம் தேதிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம் என்னவென்று தெரியும். மீண்டும் மக்கள் ஆட்சிவர நீங்கள் பரிசுப் பெட்டகச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டும் ஆர்.கே.நகர் மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. யாரிடமும் மண்டியிடாத ஆட்சியை நீங்கள் கொடுக்க வேண்டும்" என்றார்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.