காத்தான்குடிக்குப் படையெடுக்கும் சர்வதேச ஊடகவியலாளர்கள்!

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் பலர் காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொண்டு தகவல் திரட்டி வருகின்றனர்.


குண்டு வெடிப்புத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் ஊர் காத்தான்குடி என்பதனால் அப்பிரதேசம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் காத்தான்குடியின் வரலாற்றுப் பின்னணி, அவ்வூரில் நிலவி வரும் மத அடிப்படையிலான பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

இதில் முக்கியமாக காத்தான்குடியில் நிலவும் மார்க்க முரண்பாடுகளில் வஹாபிஸம், ஷீயா – சுன்னி கொள்கைகள், தரீக்கா வழிபாட்டு முறைகள், அஹமதியா நடவடிக்கைகள், காதியானி செயற்பாடுகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


No comments

Powered by Blogger.