படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட பலர் கைது!!

மட்டக்களப்பு - சவுக்கடி பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முற்பட்ட 15 பேரினை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த மே 12ம் திகதி படகு வழியாக வெளியேற முயன்றவர்கள் குறித்து மீனவர்கள் சிலர் வழங்கிய தகவலையடுத்து கலாவத்தை பகுதியை சேர்ந்த 2 சிங்களவர்களும், வந்தாறுமூலையை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களுடன் 15க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமான முறையில் படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றுள்ளதாகவும், மேலும் 15க்கும் மேற்பட்டவர்கள் தப்பி சென்றுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், படகு வழியாக மேலும் பலர் வெளியேறக்கூடும் எனக் கூறப்படுகின்றது.

கடந்த 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததன் பின், ஆஸ்திரேலியாவை நோக்கி பெருமளவில் ஈழத்தமிழர்கள் தஞ்சக்கோரிக்கை பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை எந்தவித பரிசீலனையுமின்றி முழுமையாக நிராகரித்து வருகின்றது.

இந்த காலக்கட்டத்தில், ஆஸ்திரேலியாவின் தலையீட்டின் மூலம் ஆட்கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 614 பேர் கைதாகியுள்ளனர். இதில் முதன்மையாக இலங்கையில் 489 கைதுகளும், இந்தோனேசியாவில் 66 கைதுகளும், மலேசியாவில் 48 கைதுகளும் நடந்துள்ளன. மேலும் இந்தியாவிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.