கான்ஸ் பட விழாவில் ஏ.ஆர். ரஹ்மான்!!

72வது கான்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த வருடம் உலகம் முழுவதிலும் இருந்து வந்த மொத்தம் 1,845 முழு நீளப் படங்களில் மொத்தம் 47 படங்கள் அதிகாரபூர்வ போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
எப்போதும் இல்லாத அளவில் இந்த 47 படங்களில் 13 படங்கள் பெண் இயக்குநர்களால் எடுக்கப்பட்டது. இந்த இறுதிப் பட்டியலில் எந்த ஓர் இந்தியப் படமும் இல்லையென்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி இசையமைத்து வரும் விர்ச்சுவல் ரியாலிட்டி படமாக உருவாகிக்கொண்டிருக்கும் `லே மஸ்க்' ஆங்கிலப் படத்திலிருந்து `சென்ட் ஆஃப் தி சாங்' என்ற பாடலை வெளியிட கான்ஸ் திரைப்பட விழாவுக்குச் சென்றுள்ளார்.

படங்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவிலும் இந்தியர்கள் இல்லை. இந்தியக் கலைஞர்கள் திரைப்பட விழாக்களில் பங்குபெற  பிசினஸ் கிளாஸ் ஃப்ளைட்டு, தினமும் மேக்கப் மற்றும் சிகை அலங்காரத்துக்கு ஆள் கேட்கிறார்கள் எனக் கூறப்படுகிறதாம். தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் ராஜீவ் மேனன், விக்னேஷ் சிவன் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டுள்ளனர். தேசிய திரைப்பட வளர்ச்சிப் பிரிவு சார்பாக இந்திய சினிமாத்துறைக் குறித்து சர்வதேச சினிமா கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் எடுத்துச் செல்லும் விதமாக பிரத்யேக ஸ்டால் ஒன்றும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.