16 வயதுச் சிறுவனால் உயிரை மாய்த்த 17 வயதுச் சிறுமி!!

காதலிக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதால், மனமுடைந்த சிறுமி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், புதுப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரின் மனைவி மஞ்சு. இத்தம்பதி திருப்பூரில் உள்ள மங்கலம் பகுதியில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இத்தம்பதியின் 17 வயது மகள், வீட்டருகே இயங்கி வரும் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அந்தச் சிறுமிக்கு அதேபகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவனுடன் கடந்த சில மாதங்களாகப் பழக்கம் ஏற்பட்டது. அச்சிறுமியைவிட மூத்தவனாகத் தன்னைக் காட்டிக்கொண்ட சிறுவன், கடந்த நான்கு மாதங்களாக அச்சிறுமியிடம் பழகி அடிக்கடி செலவுக்குப் பணமும் வாங்கி வந்துள்ளான்.

இந்தநிலையில், சிறுவனின் பழக்க வழக்கங்கள் பிடிக்காமல் போனதால், அவனிடமிருந்து விலகத் தொடங்கியுள்ளார் சிறுமி. இதனால் கடுங்கோபம் அடைந்த சிறுவன், அச்சிறுமியிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான். அத்துடன் தன் நண்பனான மணிகண்டன் என்பவரையும் உடன் அழைத்துச் சென்று சிறுமியிடம் தன்னைக் காதலிக்கச் சொல்லி தொந்தரவு செய்துள்ளான். இவ்வாறு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வற்புறுத்திக்கொண்டே இருந்ததால் மனமுடைந்த சிறுமி, வீட்டிலிருந்த சாணிப் பவுடரை குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர், சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியின் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து, காதல் தொல்லை கொடுத்த 16 வயதுச் சிறுவன் மற்றும் அவனுக்கு உதவிய நண்பன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.