வெள்ளித்திரைக்கு புதுவரவாகும் அணிலா ஶ்ரீகுமார்!

சின்னதம்பி' சீரியலில் பிரஜினுக்கு அம்மாவாக நடித்து வருபவர் அணிலா ஶ்ரீகுமார். தற்போது, வெள்ளித்திரையில் பிரபுவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறாராம். அந்த அனுபவம் பற்றியும், சீரியல் அனுபவம் பற்றியும் கேட்டேன்.


``நான் சின்ன வயதிலேயே சினிமா ஆர்வத்தால் இந்த ஃபீல்டுக்கு வந்தேன். மலையாளத்தில்தான் என்னுடைய முதல் படம் ரிலீஸாச்சு. பெருசா அந்தப் படம் ஓடல. அதற்குப் பிறகு, விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான, `தெய்வம் தந்து வீடு' சீரியலின் இயக்குநர் அருள்ராஜ்தான் `களத்து வீடு' சீரியலில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த சீரியலில் காயத்ரி என்பவர் ஹீரோயினாகவும், தேவிபிரியா வில்லியாகவும் நடித்திருந்தனர். அந்த சீரியலில் எனக்கு முக்கிய கதாபாத்திரத்தைத் தந்திருந்தார் இயக்குநர். அதுதான் தமிழில் எனக்கு முதல் வாய்ப்பு. தேனியில் சீரியலுக்கான படப்பிடிப்பு நடந்தது. 2015-ம் ஆண்டு ஒளிபரப்பான அந்த சீரியல் சில காரணங்களால் தொடர்ந்து ஒளிபரப்பாகவில்லை.
தமிழில் நான் காலடி எடுத்து வைத்த முதல் சீரியலே இப்படி ஃபெயிலியராகிடுச்சேனு ஒரு வருத்தம் இருந்தது. நான் வருத்தப்படுவதை அறிந்த இயக்குநர் கண்டிப்பாக அடுத்த சீரியலில் உங்களுக்கு முக்கியமான கதாபாத்திரத்தைத் தருகிறேன்'னு சொல்லியிருந்தார். அதை மனதில் வைத்துதான், அவர் இயக்கிய அடுத்த சீரியலான `சின்னதம்பி' சீரியலில் எனக்கு அன்னலட்சுமி என்கிற ரோலைக் கொடுத்தார்.

இன்றைக்கும் என்னுடைய அணிலா ஶ்ரீகுமார் என்கிற பெயரை மறந்து அன்னம் என்கிற பெயரைத்தான் மக்கள் மனதில் பதியச் செய்திருக்கிறார்கள். இந்தப் பெருமை எல்லாம் இயக்குநருக்கு போய்ச்சேரும்'' என்றவரிடம், தமிழில் படத்திலும் நடிக்க ஆரம்பித்துவிட்டீர்களாமே..?'' எனக் கேட்டதற்கு,
ஆமாங்க. இப்போதைக்கு அந்தப் படம் பற்றி அதிகம் பேச வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதனால், படம் பற்றி அதிகம் பேச முடியாது. இருந்தாலும், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக்கிறேன். சின்னத்திரையில் `சின்னதம்பி'யின் அம்மாவாக நடித்த நான், இப்போது வெள்ளித்திரையில் `சின்னதம்பி' பிரபு சாரின் மனைவியாக நடிக்கிறேன். இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக நினைக்கிறேன்' எனக் குஷியாகிறார் அணிலா ஶ்ரீகுமார்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.