நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள்!! கவிதை!

குருதி ஆறாய் கொப்பளிக்க
குற்றுயிரும் குலையுயிருமாய்
நந்திக்கடல்  ஓரத்திலே
நாவறண்டு நாம் கிடந்தோம்!


நேற்றோடு வாழ்ந்த வாழ்வை
ஆற்றோடு தொலைத்ததுபோல்
உணர்வுகளை ஓடவிட்டு
தவித்திருந்தோம் அன்றதிலே!

கண்ணிலே நீருமில்லை,
கதறியழ நேரமில்லை,
ஓடுகின்ற ஓட்டத்தில்
ஓடியே சரண்புகுந்தோம்!

வேங்கையெனப் பாய்ந்தவரும்
வேதனையில் செத்தனரே,
கைகட்டி எதிரியிடம்
மண்டியிட்ட வேளையிலே!

உள்ளத்தில் உறைந்த சோகம்
இன்னும்தான் போகவில்லை,
நெஞ்சிலே நெருப்பேந்தி
உறவுகளே வாரீரோ!

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.