வவுனியாவில் கொப்பேகடுவவின் சிலை முன் நாளை நினைவேந்தல்!!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை பல இடங்களிலும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வவுனியாவில் லெப்டினன்ட் ஜெனரல் கொப்பேகடுவவின் சிலைக்கு முன்பாக அஞ்சலி நிகழ்வு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய நினைவஞ்சலி நிகழ்வில், யுத்தத்தின்போது உயிரிழந்த இராணுவம், பொலிசார், பொதுமக்கள் ஆகிய அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலிக்கவுள்ளதாகவும், முன்னாள் வடபிராந்திய இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கொப்பேகடுவவின் ஞாபகார்த்தமாக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு முன்பாக அஞ்சலி நிகழ்வு நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை யார் வெளியிட்டது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. அமைப்பின் பெயர் குறிப்பிடாமல், வவுனியா செய்தியாளர்களிற்கு தகவல் பகிரப்பட்டுள்ளது.
Powered by Blogger.