கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி தோட்டாக்கள்!!
பாழடைந்த நீர்த்தாங்கி குழியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் நேற்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
மாளிகைக்காடு, காரைதீவு எல்லை பகுதியில் சித்தானைக்குட்டி கோயிலுக்கு அருகிலுள்ள கைவிடப்பட்ட வீட்டின் பிற்பகுதியில் இருந்த நீர்த்தாங்கி குழியிலிருந்து சொட்கன் துப்பாக்கி தோட்டாக்கள் - 21, ரி 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 6 என்பன பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
காரைதீவு கடற்படை விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்து அப்பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த இடத்தில் சம்மாந்துறை பொலிஸாரும் பிரசன்னமாகி இருந்ததுடன் மீட்கப்பட்ட பொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்தினை சுற்றிவளைத்து கடற்படையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை