கேன்ஸ் திரைப்பட விழாவில் காஞ்சிபுரம் சேலையில் கலக்கிய கங்கனா ரனாவத்!

கேன்ஸ் திரைப்படவிழா பிரான்ஸ் தேசத்தில் தொடங்கியுள்ளது. இந்த விழாவுக்கு திரைப்பட துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொள்வார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து பார்வையாளராக விக்னேஷ் சிவன் சென்றார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது படங்களை அறிமுகப்படுத்துவதற்காகச் சென்றுள்ளார்.


இதற்கிடையில் பாலிவுட் உலகைச் சேர்ந்த நடிகைகள் தீபிகாபடுகோன், ப்ரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இவர்கள் அணிந்து வந்த ஆடைகள் சுற்றியிருந்த அனைவரது கண்களையும் கவர்ந்தது. சிவப்புக் கம்பளத்தில் இவர்கள் அணிந்து வந்த ஆடைகள் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக, கங்கனா ரனாவத் இந்த முறை காஞ்சிபுரம் சேலை அணிந்து கேன்ஸ் திரைப்பட விழாவுக்குச் சென்றிருக்கிறார். இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 14-ம் தேதி ஆரம்பித்த கேன்ஸ் திரைப்படவிழா வரும் 25-ம் தேதி வரைக்கும் பிரான்ஸ் தேசத்தில் நடைபெறும். சிறந்த படத்துக்காக வழங்கப்படும் 'Golden palm award'-க்கு இந்த முறை 21 படங்கள் போட்டி போட்டுள்ளன. விருது தேர்வுக்குழுவின் தலைவராக மேக்சிகோ நாட்டைச் சேர்ந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான அலெஜாண்ட்ரோ கான்சலஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.