பாதுகாப்பு தரப்பினருக்கான கௌரவிப்பு இராணுவ நிகழ்வு!

யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் இராணுவ நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.


ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள நாடாளுமன்ற மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அத்தோடு நாட்டுக்காக உயர்நீத்த முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரை சேர்ந்தோருக்கு அஞ்சலி செத்துவதற்காக, இரவு 7 மணிக்கு வீடுகளில் விளக்கேற்றுமாறு கோரப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இதேவேளை தேசிய இராணுவ தினத்தை முன்னிட்டு, இராணுவ சிரேஷ்ட நிலை அதிகாரிகள் 38 பேருக்கு நேற்று ஜனாதிபதியால் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.