எம்.பிக்களின் கையெழுத்துடன் ஜனாதிபதியிடம் மனு!!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சராக நியமிக்க கோரி ஐக்கிய தேசிய முன்னணி மனு ஒன்றை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.


எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்த மனு கையளிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மனுவில் 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ஜனாதிபதியிடம் சிறப்பு அனுமதி பெறப்படவில்லை.

எனினும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த மனுவை கையளிக்க எதிர்பார்ப்பதாக ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தப்படி ஜனாதிபதி, பொலிஸ் திணைக்களத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியாது என்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் நிலைப்பாடாக உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.