மத்திய கிழக்கிற்கு மேலதிக துருப்புகளை அனுப்புவது குறித்து பென்டகன் பரிசீலனை!!

ஈரானுடன் நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில் மத்திய கிழக்கிற்கு மேலதிக துருப்புகளை அனுப்பும் அமெரிக்க இராணுவத்தின் கோரிக்கை தொடர்பாக பென்டகன் ஆராய்ந்து வருகிறது.


மத்திய கிழக்கிற்கு மேலும் 5 ஆயிரம் துருப்புகளை அனுப்புவதற்கு அமெரிக்க இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், அது தொடர்பாக பென்டகன் ஆராய்ந்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தனர்.

ஆனால், அமெரிக்க இராணுவத்தின் இக்கோரிக்கைக்கு பென்டகன் ஒப்புதல் வழங்குமா என்பது சந்தேகத்திற்குரிய விடயம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க இராணுவ உதவியை வலியுறுத்தி உலகம் முழுவதிலுமிருந்து பல கோரிக்கைகள் தொடர்ந்து பென்டகனுக்கு கிடைக்கப் பெற்று வருவதுடன், அது தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை பாதிப்படையச் செய்யும் வகையிலான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானம் தெஹ்ரானுக்கும், வொஷிங்டனுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.