கல்வி முறைப்பேதமே விடுதலைப்புலிகளை உருவாக்கியது - ரணில்!!

கல்வி முறையில் ஏற்படுத்தப்பட்ட பேதங்களே 1983 ஆம் ஆண்டு வன்முறைக்கும் தமிழீழ விடுதலை புலிகளின் உருவாக்கத்துக்கும் காரணமாக அமைந்தது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


எனவே, டி.எஸ். சேனநாயக்கவின் ஆட்சி காலத்தில் கட்டியெழுப்பட்ட பொதுக்கல்வி முறையை மீண்டும் உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “அனைத்து பாடசாலைகளையும் பொதுகல்வி முறைமையின் கீழ் கொண்டவருதே கல்வி அமைச்சருக்கும் மற்றும் கல்வி அமைச்சுக்குமான தற்போது இருக்கும் பொறுப்பாகும்.

இன மத அடிப்படையிலான பிரிவினை கல்விமுறையை நோக்கி செல்வதா அல்லது பொதுக்கல்வி முறையொன்றினூடாக எதிர்காலத்தை வெற்றிக்கொள்வதா என்பது குறித்து உடனடித் தீர்மானம் எடுப்பது அவசியமாகும்.

இதனிடையே, பாடசாலைகளுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடலகளை மேற்கொண்டு அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவென கல்வி அமைச்சருக்கு ஆறு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.