சிறைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த செல்போன்கள்!!

வெலிகடை புதிய மெகசீன் சிறைச்சாலையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த 44 செல்போன்களை கண்டுபித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விடுதலைப் புலிகளின் சுமார் 102 அரசியல் கைதிகள் இந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் செல்போன் புதைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையில் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட பெருந்தொகை செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என சிறைச்சாலை திணைக்களம் கூறியுள்ளது.

கைதிகளுக்கு விற்பனை செய்ய இந்த செல்போன்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாத்திரம் ஒன்றை வைத்து இந்த செல்போன்கள் புதைக்கப்பட்டிருந்தது.

இது சம்பந்தமாக சிறைச்சாலை அதிகாரி ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக சிறைச்சாலை தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.