ஜனாதிபதியிடம் முஸ்லிம் தலைமைகள் கோரிக்கை!
நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தேவையற்ற கைதுகள் இடம்பெறுவது வேதனைக்குரியது என்றும் இதனை உடன் தடுத்து நிறுத்துமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முஸ்லிம் அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதியிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, அலிசாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர்களான பௌசி, தௌபீக், மஹ்ரூப், பைசர் முஸ்தபா உள்ளிட்டோரும் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
தேவையற்ற கைதுகள் நிறுத்தப்பட்டு குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்பில்லாதவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக வலியுறுத்தினர்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை இவ்வாறான கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் சில ஊடகங்கள் போலியான பிரசாரங்களைச் செய்து வருவதாகவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது விதிக்கப்படும் கெடுபிடிகளால் நிலைமை மோசமடையாமல் இருக்க உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் இதில் கலந்துகொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக வலியுறுத்தினர்.
இதேவேளை சில ஊடகங்கள் செய்துவரும் போலியான பிரசாரங்கள் குறித்து இங்கு கவலை வெளியிட்ட ஜனாதிபதி, அப்படியான ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதுடன் சாதாரண முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுவதை தான் அனுமதிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை