வைத்தியர் சியாப்தீனுக்கு எதிராக பல பெண்கள் முறைப்பாடு!

குருணாகலில் கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி குறித்து தாதி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.


குறித்த வைத்தியரினால் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி சிசேறியன் சத்திர சிகிச்சை தனக்கு மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

சத்திர சிகிச்சையின் பின் தான் நெருக்கடிக்கு முகங்கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அடிவயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் தான் கடும் சிரமத்தில் உள்ளதாகவும், குழந்தை பெற்ற ஒருவருடத்தின் பின்னர் பல்வேறு மருந்துகளை பயன்படுத்தியமையினால் தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாக பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று ஒருநிலை வேறு ஒரு கர்ப்பிணி தாய்க்கு ஏற்படாத வகையில் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குருணாகல் வைத்தியாலையில் தாதியாக சேவை செய்த ஆர்.ஏ.மதுமாலியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் 8000 சத்திர சிகிச்சை செய்ததாக ஒப்புக்கொண்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

குறித்த வைத்தியர் தொடர்பில் ஆராய்ந்த போது, கடந்த மாதம் 10ஆம் திகதி குழந்தை பெற்ற தாய் ஒருவரின் கட்டிலின் இலக்கத்தை மாற்றி வைத்தமையினால் அவரது குழந்தை வேறு தரப்பிற்கு வழங்க இந்த வைத்தியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று சோதனை நடத்துவதற்காக சுகாதார அமைச்சின் செயலாளருக்கு, கடந்த 13ம் திகதி கடிதம் அனுப்பிய போதிலும் இதுவரையில் அதற்கு பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய வைத்தியர் தொடர்பில் குருணாகல் பொலிஸ் நிலையத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் பல முறைப்பாடுகளை செய்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.