"எங்கள் தரப்பு நியாயங்களை கேட்கவில்லை!" - மருத்துவ மாணவி தற்கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மாணவிகள் கடிதம்!!

நாங்க எல்லாம் மருத்துவம் படிக்கக் கூடாதா... மகளை இழந்த தாய், தந்தை மனைவியை இழந்த கணவன் என ஒரு குடும்பமே கலங்கி நிற்கிறது.  மே 22-ம் தேதி, மும்பையில் உள்ள  பி.ஒய்.எல் நாயர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பயல் தத்வி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
பழங்குடியினத்தைச் சேர்ந்த பயல், இளங்கலைப் பட்டம் முடித்த நிலையில், முதுகலைப் பட்டம் பெறுவதற்காக மும்பையில் தங்கி படித்துவந்துள்ளார். சீனியர் மருத்துவ மாணவிகள் இவருக்குத் தொல்லைகொடுத்துவந்துள்ளனர். சாதிய ரீதியிலாகக் கடுமையாகப் பேசியுள்ளனர். இதைத் தனது குடும்பத்தினரிடம் பயல் தெரியப்படுத்தியுள்ளார். மாணவிகளுக்காக  வாட்ஸ்-அப் குரூப்களில் தொடர்ந்து சாதி ரீதியிலாக அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில்தான், மே 22-ம் தேதி தனது தாய்க்கு போன்செய்த பயல், அந்த மூன்று பெண் மருத்துவர்கள் தன்னிடம் கடுமையாக நடந்துகொள்வதாகக் கூறியுள்ளார். இதற்குப் பின் பயலின் சடலத்தைத்தான் அவரது குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.


பயலுக்கு சாதி ரீதியாகத் தொல்லை அளித்த சீனியர் மருத்துவர்கள், ஹேமா அஹுஜா, பக்தி மேஹர் மற்றும் அன்கிதா ஆகியோர்மீது அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மருத்துவர்கள் மூவரின் அங்கீகாரத்தை மஹாராஷ்டிரா மருத்துவர்கள் சங்கம் ரத்துசெய்துள்ளது. இந்த நிலையில்,  மஹாராஷ்டிரா மருத்துவர்கள் சங்கத்திற்கு மருத்துவர்கள் மூவரும் கடிதம் எழுதியுள்ளனர். அதில்,  “நாம் ஒரு மருத்துவரை இழந்துவிட்டோம். இது மிகவும் வேதனையானது. கடுமையான பணிச்சுமைக்கு நீங்கள் ராக்கிங் எனப் பெயரிட்டால், நாம் நமது அன்றாடப் பணிகளில் ஈடுபடும்போது எல்லோரும் யாரோ ஒருவராலோ அல்லது யாரோ ஒருத்தரை ராக்கிங் செய்கிறோம். எல்லோருக்கும் இந்தப் பணிச்சுமை மற்றும் அழுத்தம், அவர்களது சீனியர்களாலோ அல்லது துறையினராலோ அளிக்கப்படுகிறது.  எங்கள் மீதும் சாதியப் பாகுபாடு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு உண்மை என நீங்கள் நம்புகிறீர்களா...  நோயாளிகளை அணுகும்போது சாதி ரீதியில்தான் அணுகுகிறோமோ... இந்த ரீதியில்தான் நண்பர்களிடம் பழகுகிறோமா. இதன் அடிப்படையில்தான் நமக்கு பணிகள் ஒதுக்கப்படுகிறதா?

இந்த விவகாரம் தொடர்பாகக் கல்லூரி நிர்வாகம் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும்.  ஆனால், தற்போது நடக்கும் விசாரணை, காவல்துறை மற்றும் ஊடகத்தின் அழுத்தத்தில்  எங்கள் தரப்பு நியாயங்களைக் கேட்காமல் நடத்தப்படுகிறது. எதனால் தற்கொலை செய்துகொண்டார் என்பதே தெரியாது. எங்கள்மீது தேவையில்லாமல் பழிசுமத்தப்படுகிறது. எங்களுடைய சுழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் குற்றச்சாட்டில் இருந்து எங்களை விடுவித்து, எங்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நாங்கள் அனைவரும் ஒருவித அழுத்தத்தில் இருக்கிறோம். இந்தச் சூழ்நிலையிலிருந்து வெளிவர நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும் எனக் கேட்கிறோம். நீங்கள் எங்களுக்கு உதவி செய்வீர்கள் என நம்புகிறோம்” என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மூவரும் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.