பள்ளி சிறுவனாக ஜெயம் ரவி! கோமாளி படத்தின் புதிய போஸ்டர்!!

அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கோமாளி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.


Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் வித்தியாசமான போஸ்டர்கள் தினமும் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மற்றுமொரு போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.பள்ளி சிறுவனாக ஜெயம் ரவி வரும் இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.