பறை கொண்டு பண்பாட்டை வளர்ப்போம்!

சரியானதொரு ஆற்றுகைப் பண்பாட்டை உருவாக்குவதன் மூலம் வன்முறையற்ற மலர்ச்சி மிகு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.
ஊரோடு ஒன்றுபட்டு நிகழ்த்தப்பட்ட ஓர் ஆற்றுகை இது.இதில் ஆற்றுவோரும் பார்வையாளரும் பெரும்பாலும் இளைஞர்களே.

இதே வயது இளைஞர்கள் தான் இன்று வழி தவறி வன்முறையிலும் போதையிலும் வீழ்ந்து பட்டு கிடக்கிறார்கள் என்று மனம் வருந்திக்கொண்டிருக்கும் இந்நிலையில் இத்தகைய ஆற்றுகைகளில் அவர்கள் உள்ளம் ஒன்றுபடவும் ஊர் ஒன்றுபடவும் நின்று செயற்படுவது வியப்புக்குரியது.

இளைஞர்கள் வழி தவறி போகிறார்கள் என்ற கவலையில் இருந்து நிமிர்ந்தெழுந்து அவர்களையும் நம் சமூகத்தையும் மீட்டெடுப்பதற்காய் "ஆற்றுவோரும் பார்வையாளரும் ஒன்றிணைகின்ற ஆற்றுகைப் பண்பாட்டை கட்டியெழுப்புவோம்"//
Powered by Blogger.