அப்பிள் நிறுவனப் பாதுகாப்புத் தளத்தை ‘ஹக்’ செய்த பாடசாலை மாணவர்!!

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பாடசாலை மாணவர், ஒருவர் அப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்புத் தளத்தை சட்டவிரோதமாக ஹக் செய்துள்ளார். அந்த நிறுவனத்தில் தொழில்வாய்ப்பை பெறுவதே அவரது முக்கிய நோக்கமாக இருந்துள்ளது.


‘அப்பிள்’ நிறுவனம் அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமாகும். ஏனைய நாட்டு மக்களும் அப்பிளின் செயல்திறனை அதிகம் விரும்புவதுடன், பலரும் இதனை வாங்குவதை இலட்சியமாகவும் கொண்டிருக்கின்றனர். அத்துடன், இந்த நிறுவனம் ஃபைனல் கட் ப்ரோ, ஐ-ரியுன்ஸ், ஐ-லைஃப் போன்ற மென்பொருட்களையும் உருவாக்குகிறது.

பாதுகாப்பிலும் மற்ற ஸ்மார்ட் தொலைபேசிகள், அன்ட்ரொய்ட்களைவிட அதிகநம்பகத்தன்மை கொண்டதாக உள்ளது. இந்தளவுக்கு பெறுமதிவாய்ந்த அப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு தளத்தினை அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் ஹக் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த ஹக்கிங் செயற்பாட்டை அந்த மாணவர் கடந்த 2015 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் கைது செய்தனர். இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அந்த மாணவரின் சட்டத்தரணி கூறுகையில், ‘ஹக் செய்து கவனத்தை ஈர்த்தால் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திலேயே தொழில் கிடைக்கும் என மாணவர் நம்பியுள்ளார். அத்துடன் ஹக்கிங் செய்தால் எப்படிப்பட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரியாமல் தவறு செய்துள்ளார்’ என வாதாடினார்.

இதையடுத்து அந்த மாணவருக்கு 700 அவுஸ்ரேலிய டொலர்கள் அபராத தொகை விதிக்கப்பட்டு, மாணவரின் 9 மாத கால நன்னடத்தை சான்றிதழை பொலிஸார் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.