பிரபல இயக்குநர் படத்தில் கதாநாயகனாக சந்தானம்

முழுக்க கதாநாயகனாகவே கவனம் செலுத்திவரும் நடிகர் சந்தானம், தற்போது இயக்குநர் ஆர். கண்ணனின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தாண்டு வெளியான தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஏ 1 படத்தின் டீஸர் சென்ற மாதம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஜான்சன் இப்படத்தை இயக்குகிறார். ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆர். கண்ணன் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் சந்தானம் நடித்திருந்த சமயத்தில் ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான்,சேட்டை என ஆர். கண்ணனின் முதல் நான்கு படங்களிலும் நடித்திருந்தார். இப்படங்களின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பமானவையாக உள்ளது. மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஒரு முன்னணி நாயகியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். ஆக்‌ஷன் மற்றும் காமெடி நிறைந்த இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜுலை மாதம் தொடங்கவுள்ளது. இந்த வருடம் டிசம்பர் மாதம் படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.