எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 3 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம்!

நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் ஆகிய இருவரும் கடந்த 1953-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டனர். இதன் நினைவாக, எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நேபாள அரசு கடந்த 14-ந் தேதி தொடங்கியது. மலையேறும் வீரர்கள் விட்டு சென்ற சமையல் பொருட்கள், கூடாரங்கள் போன்றவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குப்பைகள் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. நேபாள அரசின் இந்த தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் கிலோ வரையிலான குப்பைகளை அகற்ற இ

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.