செளக்கிதார்' மோடி கொண்டாட்டத்தைப் பின்னுக்குத் தள்ளிய `கான்ட்ராக்டர்' நேசமணி!

ப்ரண்ட்ஸ்' படத்தில் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்தின் தலையில் சுத்தியல் விழுந்து அடிபடும் காட்சியை மையமாக வைத்து நேற்றிலிருந்தே #pray_for_nesamani ஹேஷ்டேக் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்று இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும்விதமாகத் தொடங்கப்பட்ட #ModiSarkar2 மற்றும் #ModiSwearingIn ஆகிய ஹேஷ்டேக்குகளைப் பின்னுக்குத்தள்ளி நேசமணி குறித்த செய்திகளே சமூகவலைதளங்களில் முதலிடத்தில் தொடர்கின்றன.

நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், பா.ஜ.க-வுக்கு எதிரான அலை தமிழகத்தில் மட்டும் வீசியது. குறிப்பாக, வட இந்திய மக்களைத் தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படவைத்தன. அதேபோல இன்றும் `யார் அந்த நேசமணி?' என்று தமிழகம் தவிர்த்த இந்தியா முழுவதும் வியப்புடன் பார்க்கும்படியாக நேசமணி வடிவேலு ஹேஷ்டேக் மீம்ஸ்களும் நகைச்சுவைப்பதிவுகளும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துவருகின்றன.

இதுவரை பல்வேறு சமூக, அரசியல் பிரச்னைகளுக்காக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆக்கப்பட்டுவந்த சூழலில் இதுபோன்ற ஒரு திரைப்படக்காட்சியை மையமாக வைத்து உலக அளவில் டிரெண்டிங் உருவாக்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, தமிழக மக்களின், குறிப்பாக இளைஞர்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இன்னும் சிலர் பா.ஜ.க-வினர் செளக்கிதார் என்னும் பெயரைப் பயன்படுத்தியதைப் போன்று கான்ட்ராக்டர் என்னும் பெயரை தங்களின் சமூகவலைதளப் பெயருக்குப் பின்னால் சேர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

வடிவேலு சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டாலும், அவரது நகைச்சுவை இன்னமும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதையே இது காட்டுகிறது. இதேபோல மற்ற சமூகப்பிரச்னைகள் குறித்தும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங். ஆனால், நன்றாக இருக்குமே எனச் சிலர் ஆதங்கப்படுவதையும் பார்க்க முடிகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.