“#நேசமணி” தமிழினத்தை அழிப்பதற்கென உருவாக்கி உலாவ விடப்பட்டிருக்கும் #வைரஸ் !
எல்லோரும் 'நேசமணி' காய்ச்சலில் இருக்கின்றார்கள்.
இப்போது படித்தால் இது அதிகப் பிரசங்கித் தனமாகத் தெரியலாம்.
'நேசமணியை' ழான் போத்ரியா / நந்திக்கடல் கோட்பாடுகள் வழியே புரிந்து கொள்ளல்..
- சில குறிப்புகள்.
தமிழ்ச் சூழலில் பெரிதும் அறியப்படாத, 'கடைசி சிந்தனையாளரின் மரணம்' என்று அவர் மறைந்த போது தத்துவ உலகம் வர்ணித்த, சம காலத்து பிரெஞ்சு சிந்தனையாளர் ழான் போத்ரியா ((Jean Baudrillard) ஊடகங்களை முன்வைத்து 'மிகைப் போலி பிம்ப உலகு' என்று ஒரு கோட்பாட்டை முன் வைத்தார்.
உண்மைக்கும் பொய்க்கும் இடைவெளி அருகி வருவதை அவர் செயற் போலி (Simulations) மற்றும் மீமெய் (Hyperreal) தத்துவங்களினூடாக நுணுக்கக் கோட்பாட்டின் (Critical Theory) வழி மிக ஆழமான கருத்துருவாக்கங்களாக முன் வைத்தார்.
அரசுகளினதும், பெரு முதலாளிகளினதும், நிறுவனங்களினதும் அமைப்பு சார் ஒழுங்கிற்குள் ஊடகங்களின் அரசியலை - தன்னிலை அழிப்பை குறிப்பாக உண்மையின் மரணத்தை ( அசலை போலி முந்துதல் ) அவர் கருத்துருவகப்படுத்தினார்.
அதாவது, உண்மை என்று ஒன்றில்லை- இனி கட்டமைக்கப்படுவதுதான் உண்மை என்றார். அதை சமகால ஊடகப் பரப்பு நிருபித்து வருகிறது.
இத்தகைய ஒரு உலகளாவிய ஊடகப் பின்புலத்தில்தான் தமிழின அழிப்பு நடந்தேறியது வெளி உலகத்திற்கு பெருமளவில் தெரியாமலே போனது அல்லது எதிரிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையில் அவை வெளி உலகத்திற்கு போய் சேர்ந்தன.
அரசுகளைத் தாங்கும் நிறுவனங்கள், பெரு முதலாளிகளின் உலக ஒழுங்கிற்குள் இயங்கும் ஊடகங்களின் கட்டமைப்புசார் அரசியல் இது.
அதுதான் 'நந்திக்கடல்' நேரடியாக அரசுகளைத் தாக்குவதைவிட அதைத் தாங்கும் பெரு முதலாளிகள்/ நிறுவனங்கள்/அமைப்புக்கள் வகுத்து வைத்திருக்கும் உலக ஒழுங்கை நிர்மூலம் செய்வது குறித்தே அதிகம் உரையாடுகிறது.
அதுதான் அது அரசுகளை நேரடியாகத் தாக்குவதை விட, அதன் நுட்பத்தை / அதன் வடிவத்தைத் தாக்குவது குறித்து அதிகம் கரிசனை கொள்கிறது.
அதில் குறிப்பானது அதிகார வர்க்கங்களின் இந்த ஊடக வெளி குறித்த கருத்தமைவு.
இத்தகைய அவதானிப்புக்களுடன் நாம் 'நேசமணியை' அணுகினால் அதன் ஆபத்தான அரசியல் புரியும்.
சமகாலத்தில் தமிழீழமும் சரி/ தமிழகமும் சரி தனக்கான அரசியலை இழந்து கட்டமைப்பு சார் இன அழிப்புக்கு முகம் கொடுத்துள்ளது.
ஆனாலும் நந்திக்கடல் தியரிப்படி போராடும் இனத்திற்கேயுரிய பண்புகளுடன் தமக்கான எதிர் போராட்டங்களை இரு நிலமும் கட்டமைத்தும் வருகிறது.
நீண்ட கால நோக்கில் இத்தகைய போராட்டங்களை முடக்கவும் அல்லது அதை நீர்த்துப்போகச் செய்யவும் அல்லது முன் மாதிரிகளை போலிமைப்படுத்தவும் - கருத்தியல் ரீதியாகச் சிதைக்கவும் அரச எந்திரம் முயலும் என்பது கண்கூடு.
உதாரணத்திற்கு ஜல்லிக்கட்டு யூலியை சொல்லலாம்.
அதன் ஒரு வெளிப்பாடுதான், யூலி என்ற போராட்ட முகம் அன்று 'பிக்பொஸ்' வழியே சிதைவுக்குட்படுத்தப்பட்டது.
அப்போது பின் வருமாறு எழுதிய நினைவு
'நிகழ்ச்சியின் முடிவில் அது பல வகையில் இன்னமும் சிதைந்து போயிருக்கும். இனி அவர் நிச்சயம் 'ஜல்லிக்கட்டு' யூலி அல்ல.
இங்கு சிதைந்து கொண்டிருப்பது யூலி அல்ல. ஒரு இனத்தின் அரசியல் உள்ளடக்கம் - அதன் போராட்ட பண்பு.
ழான் போத்ரியாவின் தியரிப்படி ஒரு தொலைக்காட்சி நிகழ்வு வழியே ஒரு இனத்தின் அரசியல் நீக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அசலை போலி முந்துகிறது.'
அப்போது இதை கூறும்போது நக்கலாகப் பார்த்தவர்கள் இப்போது யூலியின் சிதைவின் வழியே நடந்த அரசியலை நேரடியாகவே பார்க்கலாம்.
'நேசமணி' விவகாரம் இது போல் வேறு ஒரு தளத்தில் நம்மை அரசியல் நீக்கம் செய்து கொண்டிருக்கிறது.
என்ன வேறுபாடென்றால் இங்கு நாம்தான் அதன் கருவிகளாக/ பாத்திரங்களாக மாறி எம்மை நாமே சுய அரசியல் நீக்கம் செய்து கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால் சமகாலத்தில் ஈழமும்/ தமிழகமும் தமக்கான அரசியல் இருப்பின் மீதான நெருக்கடியை மறந்து போலி பாத்திரம் ஒன்றிற்காக கண்ணீர் சிந்துகிறது.
அது அசல் அல்ல - போலி.
போத்ரியாவின் தியரிப்படி 'மிகைப் போலி பிம்ப உலகிற்குள்' பொக்ஸ் அடிக்கப்பட்டு விட்டோம்.
இதிலிருந்து நாம் மீள திரும்பும் போது ஈழத்தில் புதிதாக நிலம் விழுங்கப் பட்டிருக்கும்/ தமிழகத்தில் புதிதாக ஒரு அணு உலைக்கு அத்திவாரம் இடப்பட்டிருக்கலாம். எதுவும் நடக்கலாம்.
ஏனெனில் அரசுகளின் டிசைனே அதுதான்.
வடிவேல் ஒரு ஒப்பற்ற கலைஞன். இது வேண்டுமானால் அவருக்கு இன்னொரு மகுடமாக இருக்கலாம்.
ஆனால் நமக்கு அப்படியல்ல.
எப்போதும் உறுமிக் கொண்டு போராளி போல் எல்லோரும் அலைய முடியாது என்பது உண்மைதான். எவ்வளவு துயர் நிரம்பியிருந்தாலும் சின்ன சின்ன சந்தோசங்களால் நிரம்பியதே வாழ்வு.
ஆனால் அது அசலாக இருக்க வேண்டும். அதுவும் ஒரு இனம் கூட்டாக அதற்குள் சிக்கக் கூடாது.
அது எமக்கான அரசியல் நீக்கத்திற்குத்தான் வழி கோலும்.
தமிழகத் தமிழர்கள் தம்மை சுற்றி நடக்கும் அரசியலை இனியாவது சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை விட அதிகமாக தமிழீழத்தவர்கள் விசாலமான பார்வையைக் கொண்டிருக்க வேண்டும்.
இன்று நேசமணி உலக ட்ரெண்ட். ஆனால் தமிழின அழிப்பின் போதும் / அதன் பிற்பாடு கூட நாம் ஒரு இனமாக குழுமி நின்று கத்தியபோது உலக ஊடகங்கள் அதை ஒரு செய்தியாகக் கூட வெளியிடாமல் மூடிக் கொண்டன.
அது ஏன் நடக்கவிலை என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் அதன் அரசியல் புரியும்.
இந்த அரசியலைப் புரிந்து கொண்டால் 'நேசமணி' வழியே புகுத்தப்படும் / அல்லது நாமே புகுத்திக் கொண்ட அரசியலை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
குருரமாக தோற்கடிக்கப்பட்ட/படுகொலைக்களத்தில் எல்லோராலும் கைவிடப்பட்டு வீழ்த்தப்பட்ட/ இனப்படுகொலையைச் சந்தித்த ஒரு இனம் நிஜத்திற்கு எதிராகவே போராட முடியாமல் அல்லற்படும் நேரத்தில் புனைவிற்கும்/ பொய்மைக்கும்/ போலிமைகளுக்கும் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருப்பது மிகப் பெரிய அவலம்.
சமூக வலைத்தளங்களில் இந்த பிம்பங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறுண்டு கொண்டிருக்கின்றன. ழான் போத்ரியா மிகப்பெரிய தத்துவ மேதைதான். மே 18 இன் பிற்பாடு தமிழ்ச் சூழல் நிஜத்திற்கும் புனைவிற்குமான எல்லைக்கோட்டை முற்றாக அழித்துவிட்டிருக்கிறது.
அதன் இன்னொரு சாட்சிதான் சிரியாவில் தரையிறங்கிய கனடா விமான புரளி.
சிரிய மக்களுக்காக காத்திரமான ஒரு கூட்டு எதிர்வினையை தமிழ் சமூகம் ஒன்றிணைந்து பதிவு செய்து ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவத்தை கண்டடைந்தபோது சமூக வலைத்தளங்களில் புழங்கும் சில தற்குறிகளின் முட்டாள்தனத்தால் அது முழுவதுமாக நீர்த்துப் போய் விட்டது.
இறுதியாக, தத்துவம் / கோட்பாடு என்று நீட்டி முழக்காமல் எளிமையாகச் சொன்னால் ' அளவு கடந்த உற்சாகம் எமது உடம்புக்கு மட்டும் நல்லதல்ல - எமது அரசியலுக்கும்தான். '

கருத்துகள் இல்லை