ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டம்!

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி  ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.


அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உணர்வு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த போராட்டத்தில் தேரருடன் மேலும் சில பௌத்த மதகுருமாரும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். அத்தோடு பலர் காயமடைந்திருந்தனர்.

இதனையடுத்து இந்த தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குறிப்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோருக்கு நேரடித் தொடர்புள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

மேலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராணுவத்தளபதியிடம் கோரியிருந்ததாக இராணுவத்தளபதி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் ரிஷாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்திருந்தார்.

இதனையடுத்து ரிஷாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் விவாதங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் ஆளுநர்களையும் பதவி விலக்குமாறு வலியுறுத்தி அதுரலிய ரத்தன தேரர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.