வசமாக சிக்கியுள்ள கோடீஸ்வர வர்த்தகர் !!

133கொழும்பு - கருவாத்தோட்டம், சினமன்ட் கிரான்ட் சொகுசு வீடமைப்புத் தொகுதியில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரொருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 3


பாரியளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டிலேயே குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவரின் வீட்டிலிருந்து வெவ்வேறு வகைகளிலான 410 போதை மாத்திரைகள், 3 மில்லிகிராம் ஹெரோயின், 11 கிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் நவீன தொழிநுட்பத்துடனான தராசு, போதைப்பொருட்களை பொதி செய்வதற்கான 2500 கடதாசிகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

10 மாடிகளைக் கொண்ட குறித்த சினமன்ட் கிரான்ட் சொகுசு வீடமைப்புத் தொகுதியில் மூன்றாவது மாடியிலிருந்து இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில், குறித்த கட்டடத்தின் முதல் மாடியில் வசித்து வந்த மேற்படி வர்த்தகர், வேறொரு நபரின் பெயரில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா மாத வாடகை அ​டிப்படையில் மூன்றாவது மாடியிலுள்ள வீட்டை பெற்றுள்ளார்.

அத்துடன் வசமாக சிக்கிய அவர் மருதானை, பஞ்சிகாவத்தை பிரதேசங்களில் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையங்கள் மூன்றின் உரிமையாளர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய சந்தேகநபரை ஏழு நாள்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸாரை மேற்கோள்காட்டில் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.