ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!!

அனுராதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண்ணொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் இருந்து 9 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மேலும் , குறித்த பெண்ணிடம் இருந்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான பணம் காவற்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தலாவ பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண் இன்று அனுராதபுர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.