சுன்னாகம் ஒயில் பிரச்சனைக்கு சமமான ஒரு பிரச்சனை மக்களின் கவனத்திற்கு.!!

கஸ்தூரியார் வீதியில் உள்ள வெள்ளவாய்களுக்குள் அசிட் திரவத்தை நகை சுத்தம் செய்யும் இந்தியர்களின் பல வேலைதளத்தில் இருந்து அதான்  உரிமையாளர்களினால் விடப்படுகின்றது.
இது சுன்னாகம் ஒயில் பிரச்சனையை ஒத்த ஒரு பிரச்சனை ஆகவே இதில் கவனம் தேவை . இது சம்பந்தமாக  பல தடவைகள் யாழ் மாநகர சபையிடம் முறைப்பாடு செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று மக்கள் கூறினார்கள். 

இந்த பிரச்சனை அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்ட வாட்டர உறுப்பினர் திரு. அருள்குமரன் அவர்களும் மற்றும் சுகாதார குழு தலைவர் வரதராஜன் பார்த்திபன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் சிவகந்தன் தனுசன். திரு .லோகதாயளன் அவர்களும் சம்பவ இடத்தை பார்வையிட்டார்கள். இதில் பணியாற்றும் எமது மாநகர சபை ஊழியர்களின் பாதுகாப்பும்  எமது கடமை என்பதை உணர்ந்து யாழ் மாநகர சபையும் அதான் முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கவனத்திற்கு எடுக்க வேண்டும்.


Powered by Blogger.