ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு..!!

“பாதுகாப்பான தாய்நாடு - உற்சாகமான வேலைத்தளம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிற்சங்க ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தின நிகழ்வு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (01) பிற்பகல் இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரருமான நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கட்சித் தொண்டர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

புதிய சமசமாஜ கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் லெஸ்லி தேவேந்திர உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.