லண்டனில் கோலாகலமாக தொடங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி!

லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை முன், நேற்று ஐ.சி.சி உலகக்கோப்பை திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

12வது ஐ.சி.சி உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக லண்டனில் தொடங்கியது. பக்கிங்ஹாம் அரண்மனை முன் இருக்கும் வர்த்தக மையம் முன் தொடங்கிய இந்த திருவிழாவில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 60 வினாடிகள் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

இதில் 10 அணிகள் சார்பில் இரு பிரபலங்கள் பங்கேற்று, ஒரு நிமிடத்தில் எத்தனை ஓட்டங்கள் எடுக்கிறார்கள் என்பது விதியாகும். ரப்பர் பந்துகளால் நடத்தப்பட்ட இந்த போட்டிக்கு, அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் டேவிட் பூன் நடுவராக செயல்பட்டார்.

இந்தப் போட்டியில் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து அணி 74 ஓட்டங்கள் சேர்த்து வெற்றி பெற்றது. பிரெட் லீ-யின் அவுஸ்திரேலிய அணி 69 ஓட்டங்கள் எடுத்து இரண்டாவது இடமும், ஆப்கானிஸ்தான் அணி 52 ஓட்டங்களுடன் மூன்றாவது இடமும் பிடித்தன.
ஜெயர்வர்த்தனே தலைமையிலான இலங்கை அணி 43 ஓட்டங்கள் எடுத்தது. கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி 19 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து கடைசி இடத்தை பிடித்தது. முன்னதாக நடந்த இசை நிகழ்ச்சியில், இங்கிலாந்தின் பாப் பாடகர் ஜான் நியூமேன் பாடல் பாடினார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான முன்னாள் வீரர்கள் பேசினர். இன்று நடக்க உள்ள உலகக்கோப்பை முதல் போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி லண்டனின் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo #England Cricket Team



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.