மன்னாரில் வனவளத் திணைக்கள அதிகாரிகளால் சட்டம் மீறிய அடாவடித்தனம்!!


மன்னாரில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேத்தாவாடி பகுதி மக்களுக்கு வனவள திணைக்கள அதிகாரிகளால் கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மக்கள் விவசாயம் செய்யும் காணிகள் வனவள திணைக்கள அதிகாரிகளினால் எல்லைக்குட்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேத்தாவாடி பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பொது மக்கள் விவசாயம் மற்றும் தோட்டச் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2000ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த பகுதியில் மக்கள் குடியேறி அதன் அருகிலுள்ள அரச காணிகளைத் துப்பரவு செய்து தோட்டச் செய்கைகளை மேற்கொண்டனர்.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீண்டும் அக்காணிகளில் மீள் குடியமர்ந்துள்ள நிலையில் அங்கு மக்கள் பயிர் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தோட்டக் காணிகளில் வருமானத்திற்காக மிளகாய், தக்காளி உள்ளிட்ட பல்வேறு பயிர்ச் செய்கைகளை அவர்கள் மேற்கொண்டு வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.

இந்நிலையில் குறித்த காணி வனவள திணைக்கள அதிகாரிகளினால் எல்லைகள் இடப்பட்டு இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னதாக வெளியேற வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமது வாழ்வாதர தொழில் மற்றும் தாம் காலகாலமாக வாழ்ந்து வந்த காணிகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும், பாரம்பரியமாக தாங்கள் பயிர் செய்து வாழ்வாதரத்தை தேடும் தமது காணிகளை நிரந்தரமாக பெற்று தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.