வீண் விரையமாக்கப்படுகிறது இரணைமடு நீர்!!

2019 சிறுபோகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ள நீர் வீண் விரையமாகி சிறு குளங்கள் போன்று தேங்கி நிற்கும் காட்சிகளும், கழிவு வாய்க்கால் ஊடாக பெருமளவு நீர் வெளியேறுவதும், பூட்டப்பட்ட வாய்க்கால் கதவின் மேலாக நீர் விரையமாவதனையும் படங்களில் காணலாம்.
ஒரு ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 3.5 ஏக்கர் அடி நீர் பயன்படுத்தப்படுகின்ற போதும் கிளிநொச்சியில் ஒரு ஏக்கர் நெற்செய்கைக்கு தற்போது 6.5 ஏக்கர் அடி நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது சிறுபோக நெற்செய்கைக்காக கடந்த மாதம் இரணைமடுகுளம் திறந்து விடப்பட்ட போது 33.3 அடியாக இருந்த நீர் மட்ட இன்றைய நிலையில் 28 அடியாக காணப்படுகிறது.இது நாளுக்கு நாள் குறைந்து செல்லும் என தீர்மானிக்கப்படுகின்றது.
Powered by Blogger.