யாழ். பல்கலையில் காவல்துறையால் மாணவ தலைவர், செயலாளர் கைது!!


யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலை வளாகத்திற்குள் தமிழீழ விடுதலை புலிகளின் ஒளிப்படங்கள், தொலைநோக்கி மற்றும் இராணுவம் பயன்படுத்தும் சப்பாத்துக்கள் மீட்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவா் விடுதி ஆகியன இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவா் ஒன்றிய கட்டடம் மற்றும் பல்கலைக்கழக மாணவா் விடுதி ஆகியன கடுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டது. இந்நிலையில் மாணவா் ஒன்றிய கட்டடம் மற்றும் மாணவா் விடுதி ஆகியவற்றுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் போராளிகளின் ஒளிப்படங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது. இதனடிப்படையில் பல்கலைக்கழக மாணவா் ஒன்றிய தலைவா் மற்றும் செயலாளா் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.