யாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் சில பொருட்களை பாதுகாப்புத் தரப்பினர் கண்டெடுத்துள்ளனர்.

இராணுவத்தினர் பயன்படுத்தும் அங்கி மற்றும் கொமாண்டோ படையணி வீரர்கள் பயன்படுத்தும் தண்ணீர் கொள்கலன் உள்ளிட்ட சில பொருட்களை பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.

இதுதவிர ரி_56 ரக இரண்டு ரவைகளையும், பட்டாசுகள் சிலவற்றையும் பாதுகாப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த பொருட்கள் தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், அல்லைப்பிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவிர தேடுதல்களை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.