யாழ். பல்கலை மாணவர்களின் கைதினை திசை திருப்ப முயற்சி!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை சட்ட பிரச்சினையாக திசை திருப்பியுள்ளதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையம் குற்றம் சுமத்தியுள்ளது.


அத்தோடு அவர்களின் கைது அரசியல் பிரச்சினையென்றும் அதனை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்தே தீர்க்க முடியுமென்றும் அந்த மையத்தின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், தென்னிலங்கையில் ஆயுத போராட்டத்தை மேற்கொண்ட ஜே.வி.பி. இன் தலைவரின் ஒளிப்படத்தை அனைவரும் வைத்துள்ள நிலையில் அங்கு எவரும் கைது செய்யப்படுவதில்லை ஆனால், வடக்கில் இவ்வாறு கைது செய்யப்படுவது அற்பத்தனமான அரசியல் காரணங்களுக்காகவே என தாம் கருதுவதாக தெரிவித்தார்.

தங்களுடைய ஆட்சி அதிகார நலன்களுக்கு புலிகள் மீள் எழுச்சியடைகின்றனர் என்ற கற்பனை கதை அவர்களுக்கு தேவையாக உள்ளதாகவும் அதற்காகவே மாணவர்கள் பழிவாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு இந்த மாணவர்களின் கைது அரசியல் பிரச்சினையென்றும் அதனை சட்ட பிரச்சினையாக சிலர் திசை திருப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.