யாழில் பிரசித்தி பெற்ற கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி!!

யாழில் பிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று வெள்ளிக்கிழமை (03-05-2019) வெகு விமர்சையாக இடம்பெற்றது. இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள் நடைபெற்றன. வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து விநாயகர் , வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான் , பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமான் ஆகிய முத் தெய்வங்களும் தேருக்கு எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது.


முற்பகல்-10.30 மணிக்கு முத் தெய்வங்களும் முத் தேர்களில் எழுந்தருளிய பின்னர் பக்தர்கள் அரோகராக் கோஷம் எழுப்ப,ஆண் அடியவர்கள் ஒருபுறமும் , பெண் அடியவர்கள் மறுபுறமும் வடம் தொட்டிழுக்க முத்தேர்களும் மெல்ல மெல்ல அசைந்தாடி வலம் வந்த காட்சி அற்புதமானது.

 முத்தேர்களும் முற்பகல்-11.45 மணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தன. அதனைத் தொடர்ந்து அடியார்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.
முத்தேர்களும் பவனி வந்த வேளையில் ஆண் அடியார்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும் தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.

இன்றைய முத்தேர் பவனியில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் சுன்னாகம் மற்றும் அதனை அண்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அடியவர்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.