காதல் வலையா?தீவிரவாதியா?தமிழ் பெண்ணின் தாயாரின் கண்ணீா் கதை.!!

உயிா்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் தற்கொலை தாக்குதல்தாாியாக செயற்பட்ட தமிழ் பெண்ணை முஸ்லிம் இளைஞா் ஒருவா் காதல் வலையில் வீழ்த்தி தற்கொலை குண்தாாியாக மாற்றியதாக பெண்ணின் தயாா் கண்ணீா்மல்க கூறியுள்ளாா்.


உயிா்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய தற்கொலைப் படை தீவிரவாதிகளின் படங்களை பொலிசார் வெளியிட்ட நிலையில் அதில் புலஸ்தினி மகேந்திரன் என்ற தமிழ் பெண்ணின் படமும் இடம்பெற்றிருந்தது.

அந்தப் பெண் மட்டக்களப்பு தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்.

இதுதொடர்பாக புலஸ்தினியின் தாய் கவிதா கூறுகையில், புலஸ்தினி பள்ளி, கல்லூரி படிப்பில் முதலிடம் பிடித்து வந்தார். கல்லூரியில் படித்தபோது அச்சி முகமது ஹஸ்தும் என்பவர் எனது மகளை காதல் வலையில் வீழ்த்தி கடத்திச் சென்றுவிட்டார்.

பின்னர் அவளை மதம் மாற்றம் செய்து சாரா என்று பெயர் சூட்டியுள்ளனர். கடைசியாக மனித வெடிகுண்டாக மாற்றி அவளது உயிரையே பறித்துவிட்டனர் என கண்ணீருடன் கூறியுள்ளனர்.

நீர்க்கொழும்பு தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் புலஸ்தினியும், அச்சி முகமது ஹஸ்தும் தற்கொலைப்படை தீவிரவாதிகளாக வெடித்துச் சிதறியதாக பொலிசார் கூறியது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.