கொட்டடி நமசிவாயம் வித்தியாசாலை மாணவர்களுக்கு நூல்கள் அன்பளிப்பு!!

யாழ்ப்பாணம் - கொட்டடியைச் சேர்ந்த கலைஞர் அமரர் கந்தையா பேரம்பலம் இறைபதமடைந்து ஓராண்டு நினைவாக கொட்டடி நமசிவாயம் வித்தியாலயத்திற்கு சுவிஸில் வசிக்கும் பாலசிங்கம் சுகிர்தனின் நிதி உதவியுடன் வெண்கரம் அமைப்பினால்  ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


வெண்கரம் அமைப்பின் சிரேஸ்ட ஆலோசகரான அமரர் பேரம்பலம், யாழ். மாநகர சபை எல்லைக்குள் முதன் முதலில் கொட்டடியில் முத்தமிழ் சனசமூக நிலையத்தை ஆரம்பித்தவர். மாணவர்களுக்கு இலவசமாக கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தவர். கலைத்துறையிலும் சிறந்து விளங்கியவர்.

இவரது நினைவாக  (23.05.2019) வெண்கரம் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் பாடசாலை உப அதிபர் திருமதி சிவகடாட்சத்திடம் நூல்களைக் கையளித்தார்.

இதேவேளை, நூல்களைக் கொள்வனவு செய்வதற்கு உதவிய சுகிர்தன், வெண்கரம் படிப்பக மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுக்கும் உதவிகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.