சந்தேகநபர்களை விசாரிக்க அனுமதி வழங்குமாறு இராணுவம் கோரிக்கை!


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக கைது செய்யப்படும் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தினருக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இராணுவத்தினர் கைது செய்யும் சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அவ்வாறு கைது செய்யப்படும் சந்தேகநபர்களை விசாரணை செய்யும் அதிகாரத்தை தமக்கு வழங்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏனெனில், கைது செய்யப்பட்டவுடன் அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவது நல்லதென்றும் இதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கும் என தான் நம்புவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.