முள்ளிவாய்க்காலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உண்ணாவிரதம்!!

817 நாளாக தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்காலில் இன்று அடையாள உண்ணாவிரதமும் அஞ்சலி நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டது .


இந்த அடையாள உண்ணாவிரதத்தில் அஞ்சலி நிகழ்விலும் தமது பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்த பெற்றோர் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலியை செலுத்தினர்.

இதன் பின்னர் இந்த உறவுகளால் ஐ.நா அதிகாரிக்கு அனுப்பிவைக்கவென ஒரு மகஜரும் ஊடகங்கள் முன்னிலையில் வாசித்து காண்பிக்கபட்டது .

அந்த மகஜர் பின்வருமாறு ,

அன்புள்ள செயலாளர் – ஜெனரல் அன்டோனியோ கெடரெஸ்,

இலங்கையில் காணாமற் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் தமிழ் பெற்றோர்கள் நாங்கள் கீழே கையொப்பமிட்டுள்ளோம். இன்று தமிழர்களின் இலங்கை இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிறைவு தமிழர்களின் நெஞ்சங்கள் வெடித்த நாள் . முள்ளிவாய்க்காலில் நாங்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கிறோம். 145,000 மேற்படட தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் இரக்கம் காட்டாமல் படுகொலை செய்யப்பட்டார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் பற்றிய உண்மையைச் சொல்லுவதில் இலங்கை உறுதியாக இல்லை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என இலங்கை அறிவித்துள்ளது. இன்னும் 25,000 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழர்களை கொலை செய்யும் அல்லது கொடுமைப்படுத்தும் ஒவ்வொரு குற்றவாளிகளுக்கும், இலங்கை ஒருபோதும் தண்டித்ததில்லை தண்டிக்கப்போவதுமில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிக்க இலங்கைக்கு அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு கூட இனி காத்திருக்க முடியாது.

யுத்தம் முடிவடைந்ததில் இருந்து தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009 மே மாதம் 145,000 அப்பாவி மக்களை படுகொலை செய்தவர்களை தமிழர்கள் வெறுமனே நம்ப முடியாது. இலங்கை இராணுவம் இன்னமும் தமிழர்களின் வீடுகள், நிலங்கள் மற்றும் பண்ணைகளை ஆக்கிரமித்து வருகிறது. மேலும் இலங்கை இராணுவம் தமிழ் பெண்களையும், ஆண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து பாலியல் அடிமை முகாம்களை இலங்கையில் நடத்துகின்றது. ஸ்ரீலங்காவின் கொடூரமான பயங்கரவாத சட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தால் இன்னும் பல தமிழர்கள் கடத்தப்பட்டு கொண்டேயுள்ளனர் .

ஆகையால், இப்போது ஒரு நல்ல நேரம் , இலங்கையின் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) கொண்டு செல்வதற்கும், தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கும், காணாது ஆக்கப்பட்டோரை கண்டுபிடிக்கவும். இதை நீங்கள் செய்ய வேண்டிய நேரம் இது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.