கலவர பூமிக்கு சென்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்!
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நீர்கொழும்பிற்கு விஜயம் செய்துள்ளார்.
நாட்டில் காணப்படுகின்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு தரப்பினரிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இதன்போது சில வாகனங்கள் எரியூட்டப்பட்டிருந்ததுடன், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.
அத்துடன், பதற்றமான சூழ்நிலையை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இன்று காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்ததுடன், அது தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கலவரம் இடம்பெற்ற பகுதிக்கு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று(திங்கட்கிழமை) காலை விஜயம் செய்துள்ளார்.
அங்கு சென்ற பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இஸ்லாமிய மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசியுள்ளார்.
கருத்துகள் இல்லை