முதல்வரை மாற்றவே சசிகலா விரும்புகிறார்!-எம்.எல்.ஏ.பிரபு பேட்டி!
கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ, பிரபு தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு, மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகை மூலமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தினகரன் ஆதரவாளர்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும். கொறடாவின் புகாரின் பேரில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ரத்தினசபாபதியும், கலைச்செல்வனும் நீதி கேட்டு உச்ச நீதிமன்றப் படியேறியுள்ளார்கள். பிரபு மட்டும் நீதிமன்றத்துக்குப் போகாமல் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனைகள் செய்துவருகிறார்.
மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில் பிரபு எம்.எல்.ஏ.வைப் பற்றி செய்தி வெளியாக, அதைத் தொடர்ந்து பல ஊடகங்களிலும் பிரபுவை மையமாக வைத்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் (மே 5) காலை பிரபுவே நம் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசினார். “என்னை யாரும் கடத்தவில்லை, என்னிடம் அதிமுகவினர் யாரும் பேசவும் இல்லை. என் குடும்பத்தாரிடமும் யாரும் மிரட்டவும் இல்லை, பேசவும் இல்லை” என்று மறுத்தவர் தொடர்ந்து பேசினார். “புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எனக்கு எம்.எல்.ஏ. வாய்ப்புக் கொடுத்தார்கள். நான் விசுவாசத்துடன் அதிமுகவில் தான் இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி முதல்வராகியது சின்னம்மா ஆசியோடும் ஆதரவோடும்தான். அவர் முதல்வராக நானும் வாக்களித்தேன். ஆனால். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.கள் 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்பாமல், அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்ட எங்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் உள்ளது. அதிமுகவிலிருந்து அமமுக பிரிந்து கட்சி உரிமையைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. நீதிமன்றமும் அதிமுகவில் ஒரு அணிதான் அமமுக, வழக்கு முடியும் வரையில் அவர்கள் அமமுகவில் செயல்படுவதில் தவறு இல்லை என்று கூறியிருக்கிறது. சின்னம்மாவை (சசிகலா) பொறுத்தவரையில் ஆட்சி மாற்றத்தை அப்போதிலிருந்தே விரும்பவில்லை, ஆனால் ஆட்சித் தலைமையை (முதல்வர்) மாற்றத்தான் விரும்புகிறார். அது நிச்சயம் நடக்கும். அமமுகவுக்கு பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று கட்சியைப் பதிவுசெய்துள்ளார் அண்ணன் டிடிவி தினகரன். நான் அந்த கட்சியில் உறுப்பினராக இல்லை, பொறுப்பிலும் இல்லை. நான் தொடர்ந்து அதிமுகவில்தான் செயல்பட்டுவருகிறேன். சின்னம்மா உச்ச நீதிமன்றத்தில் அதிமுகவுக்கும் சின்னத்திற்கும் உரிமைக் கேட்டு பெட்டிஷன் போட்டுள்ளார். அது விசாரணையில் உள்ளது. அதுவரையில் சின்னம்மா வழியில் பயணம் செய்வேன். நாங்கள் இதுவரையில் ஆட்சிக்கு எதிராக நடந்தது இல்லை வாக்களித்ததும் இல்லை, சபாநாயகர் சட்டமன்றத்தில் எதைக் கொண்டுவந்தாலும் அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவோம் எதிராகச் செயல்படமாட்டோம். சபாநாயகர் முதலில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கவேண்டும். அதைவிட்டுட்டு ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சட்டமன்ற மரபுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது. இனியும் ஆட்சிக்கு எதிராகச் செயல்படமாட்டோம். நாளை 6 ஆம் தேதி, திங்கள் கிழமை சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்துப் பேசவிருக்கிறேன். நான் எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன். என்னை யாரும் கடத்த முடியாது. தொடர்ந்து சின்னம்மா வழியில் பயணம் செய்வேன். நான் இப்போதும் அதிமுகவில்தான் இருக்கிறேன்” என்று உறுதியான குரலில் கருத்துகளைத் தெரிவித்தார் எம்.எல்.ஏ.பிரபு. -காசி

.jpeg
)

கருத்துகள் இல்லை