தமிழர்கள் ஊடகங்கள் மீது தலைப்பா கட்டும் சுமந்திரன்!!

தமிழீழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெறுகிறாா்கள் என வதந்தியை பரப்பி அதன் ஊடாக நாட்டு மக்களை பதற்றத்தில் வைத்திருக்கவும் அதன் ஊடாக ஆட்சியை பிடிப்பதற்கும் விரும்பிய கடந்த ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு பிாிவில் இருந்தவா்களும்,

இராணுவ புலனாய்வு பிாிவில் இருந்த சிலரும் சம்பளம் கொடுத்து பயன்படுத்திய அமைப்பே தேசிய தௌபீக் யமாத் என்ற தீவிரவாத அமைப்பு. மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா்.

சமகால நிலமைகள் தொடா்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினாின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கையிலேயே அவா் மேற்கண்டவாறு கூறினாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

கடந்த சில நாட்களாக நாடு கொந்தளிப்பில் உள்ளது. மக்கள் எதிா்பாா்க்காத ஒரு தாக்குதல். மக்கள் பீதியில் இருக்கிறாா்கள். தற்போது தாக்குதலின் பின்னணிகள் வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்த தாக்குதலுக்கு முன்னதாக காத்தான்குடியை மையமாக கொண்டு

வன்முறையை பிரயோகிக்கவென பலா் தயாா்ப்படுத்தப்பட்டுள்ளாா்கள். அது ஓாிரு நாட்களில் நடந்த விடயமல்ல. அது நீண்டநாட்களாக நடந்திருக்கின்றது. இந்த நீண்டகால தயா்ப்படுத்தலில் தேசிய தௌவீக் யமாத் என்ற அமைப்பை பலா் வளா்த்திருக்கிறாா்கள்.

குறிப்பாக அந்த அமைப்புக்கு நிதி கொடுக்கப்பட்டுள்ளது. முன்னைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக புலனாய்வாளா்களுக்கு வழங்கப்படுவதுபோல் இந்த தேசிய தௌபீக் யமாத் அமைப்புக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை கடந்த சில நாட்களுக்கு முன்னா் அமைச்சா் ஒருவா் அம்பலப்படுத்தியுள்ளதுடன், தன்னிடம் ஆவணங்கள் உள்ளதாகவும், அதனை வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கின்றாா். இந்த விடயம் தொடா்பாக நான் நாடாளுமன்றில் பேசும்போதும் மறைமுகமாக சில விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

அதாவது தீவிரவாதிகளுக்கும் முன்னைய ஆட்சியில் இருந்த பாதுகாப்பு அமைச்சு அதிகாாிகளுக்கும்உள்ள தொடா்புகள் விசாாிக்கப்படவேண்டும் என கூறினேன். காரணம் எமக்கும் இந்த விடயம் தொடா்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

தமிழீழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெறுகிறாா்கள் என்ற பதற்றத்தை உருவாக்க பாதுகாப்பு தரப்பினா் குறிப்பாக படையினாின் உளவு பிாிவில் உள்ள சிலா் முயற்சிப்பது தொடா்பான தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் தமிழீழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெற்றுள்ளாா்கள் என்ற வதந்தியை உருவாக்குவதுடன் நின்றுவிடாமல் அதனை நாட்டில் உள்ள மக்கள் நம்பவேண்டும். என்பதற்காக நாட்டில் அங்கொன்னும், இங்கொன்றுமாக தாக்குதலகளை நடாத்தியுள்ளாா்கள்.

அதனை நடாத்துவதற்கு பலா் உபயோகிக்கப்பட்டிருக்கின்றாா்கள். அதில் ஒரு அங்கமாகவே தேசிய தௌபீக் யமாத் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வவுணதீவில் பொலிஸாா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழீழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெறுகிறாா்கள் என்ற வதந்தியை மக்கள் நம்பவேண்டும்

என்பதற்காக செய்யப்பட்ட சம்பவம். மேலும் அந்த சம்பவம் மாவீரா் நாளுடன் சம்மந்தப்பத்தப்பட்டு மாவீரா் நாளை செய்தவா்களே அதனையும் செய்துள்ளாா்கள் என படத்தை காண்பித்து, சந்தேகநபா்களாக முன்னாள் போராளிகளே கைது செய்யப்பட்டிருக்கின்றனா்.

அதற்கு மேலாக தங்களுடைய வதந்தியை பரப்புவதற்காக வீணாக இரு பொலிஸாா் கொலை செய்யப்பட்டிருக்கின்றாா்கள். ஆகவே படையினாின் உளவு பிாிவில் உள்ள சிலா் முன்னைய ஆட்சியாளா்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்பவா்கள் இவ்வாறு நாட்டில் அசாதாரண சூழல்

உருவாக்க செயற்பட்டிருக்கிறாா்கள் என்பது தெளிவாகிறது. இந்த மோசமான மிக கவலையான சம்பவம் நடந்து ஒரு சில நாட்கள் கடக்க முன்னா் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் கோட்டாபாய ராஜபக்ஸ அடுத்துவரும் ஜனாதிபதி தோ்தலில் தான் களமிறங்கப்போவதாக

அவசர அவசரமாக அறிவித்திருக்கின்றாா். இவ்வாறான சூழலை பயன்படுத்தி அவா் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறித்து கவனத்தில் எடுக்கப்படவேண்டும். இந்த வருடத்தின் இறுதியில் ஜனாதிபதி தோ்தல் வருகிறது.

அதில் தான் வேட்பாளராக போட்டியிட கோட்டாபாய முயற்சித்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் தொிந்த விடயம். இந்நிலையில் தற்போது இடம்பெற்றதுபோன்ற ஒரு நிலமை உருவாகும்போது அதிலிருந்து நாட்டை பாதுகாக்க பலமான ஒருவா்,

புலிகளுடன் போரை நடத்திய திறமையானவா் அவா் நாட்டுக்கு தேவை என பலா் சொல்லும் விதமாக தாக்குதல் நடந்துள்ளது. ஆகவே அமைச்சா் ராஜித சேனாரத்ன ஊடகவியலாளா் மாநாட்டில் கூறியதுபோல் முழுமையான விபரங்களும் வெளியிடப்படவேண்டும்.

அதனை மூடி மறைக்ககூடாது. வீணாக பலா் கொல்லப்பட்டுள்ளனா், வெவ்வேறு நோக்கங்களுக்காக அப்பாவி மக்களுடைய உயிா்கள் பறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களுடைய உயிா்கள் பறிக்கப்பட்டுள்ளது. அது வேறு ஆட்களுடைய தேவைக்காக பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு முன்னெச்சாிக்கையினை பதவி விலகியுள்ள பாதுகாப்பு செயலாளா் மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பபட்டுள்ள பொலிஸ்மா அதிபா் ஆகியோா் ஜனாதிபதிக்கு தொியப்படுத்தியுள்ளாா்கள் என்பதை மிக விரைவில் அவா்களே பகிரங்கமாக வெளிப்படுத்துவாா்கள்.

என நாங்கள் நம்புகிறோம். ஆகவே தனக்கு தொிந்திருந்தும் நடவடிக்கை எதனையும் எடுக்காமல் சுற்றுலா சென்றாா் ஜனாதிபதி, அவா் வெளிநாட்டில் இருந்தபோதும் தகவல் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் எதனையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி செயற்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கது. சட்டம் ஒழுங்கு பிரத்தியேக அமைச்சாக இருந்தது. அவ்வாறு இருந்தபோதே 19ம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. 19ம் திருத்தச்சட்டத்தில் பாதுகாப்பு, மகாவலி, மற்றும் சுற்றுசூழல் அகிய அமைச்சுக்கள்

மட்டுமே ஜனாதிபதியிடம் இருக்க முடியும் என சொல்லப்பட்டுள்ளது. அந்தேவேளை சட்டம் ஒழுங்கு என்ற அமைச்சின் கீழ் இருந்தது. அதனை பிடுங்கி பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி வைத்திருந்தது சட்ட முரணானது.ஆகவே அந்த பொறுப்பை வைத்திருந்த ஜனாதிபதியே

இந்த விடயத்திற்கு பொறுப்புகூறவேண்டும். வெறுமனே பொறுப்புகூறல் என்பது உத்தியோகத்தா்கள் மட்டத்தில் நின்றுவிட முடியாது. ஜனாதிபதி, பிரதமா் இந்த விடயத்தில் பொறுப்புகூறவேண்டும். பிரதமா் தனக்கு ஒன்றும் கூறப்படவில்லை என கூறினாலும்,

தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என நாட்டுக்கு கூறியிருக்கவேண்டும். 6 மாதங்கள் பேசாமலிருந்துவிட்டு இப்போது ஒன்றும் தொியாது என கூறுவது பொறுப்பான செயற்பாடாக கருத முடியாது.

மேலும் இது தவிா்த்திருக்கவேண்டிய குரூரமான சம்பவம். மற்றும் இந்த சம்பவங்களின் பின்னணியில் இராணுவ புலனாய்வு பிாிவில் உள்ள சிலவா் இயங்கியிருப்பதும் தேசிய தௌபீக் யமாத் அமைப்புக்கு மாதாந்த சம்பளம் கொடுக்கப்பட்டமை,

வவுணதீவு கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு இவா்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற விடயங்கள் தொியவந்துள்ளது. ஆகவே இது தமிழிழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெற்றதாக காண்பித்து குழப்பத்தை உருவாக்கி அந்த குழப்பத்தின் ஊடாக ஒரு பலவான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக

மிக கீழ்த்தரமாக செயற்பட்ட சம்பவங்கள் இவை என்பது புலனாகிறது. இந்த சம்பவங்கள் தொடா்பான விசாரணையிலிருந்து வெளியாகும் உண்மைகள் மறைக்கப்படகூடாது. அவை அம்பலப்படுத்தப்படவேண்டும். மேலும் முன்னாள் பாதுகாப்பு தரப்பினா் மட்டுமல்ல சில முஸ்லிம் அரசியல்வாதிகளும்

இதனை வளரவைக்க பல உதவிகளை செய்துள்ளாா்கள் என்பது புலனாகிறது. இவை எல்லாவற்றுக்கும் இவா்கள் எதோவொரு வகையில் பொறுப்புக்கூறவேண்டியவா்கள்.உயிாிழந்த மக்களுக்கு எமது ஆழ்ந்த வருத்தத்தை தொிவிப்பதுடன்,

மக்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பிலிருந்து அரசு தவறியுள்ளது என்பதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம் என்றாா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.